ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் விழா
நெல்லையில் ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் விழா நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஆவணி மாதம் அவிட்டம் நட்சத்திரம் அன்று புதிதாக பூணூல் அணிதல் மற்றும் பூணூல் புதுப்பித்து அணிதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த ஆண்டு நேற்று ஆவணி அவிட்டத்தையொட்டி நெல்லையில் பல்வேறு இடங்களில் பூணூல் அணியும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோவில், தச்சநல்லூர் சிவன் கோவில், பாளையங்கோட்டை மேலரதவீதி சுந்தர விநாயகர் கோவில், டவுன் அக்கசாலை விநாயகர் கோவில், மகாராஜ நகர் மகாதேவ சுவாமி கோவில், என்.ஜி.ஓ. காலனி தாம்பிராஸ் சங்க கட்டிடம், விவேக சம்வர்த்தினி சபா, பெருமாள்புரம் விநாயகர் கோவில் உள்ளிட்ட இடங்களில் பிராமணர்கள், விஸ்வகர்மா சமுதாயத்தினர் உள்ளிட்ட பூநூல் அணிவோர் நேற்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பூணூல் அணிந்து கொண்டனர்.