ஆட்டோ திருடிய வாலிபர் கைது

Update: 2023-08-17 16:41 GMT


திருப்பூர் ராயபுரத்தை சேர்ந்தவர் பார்த்தீபன் (வயது 32). இவர் சொந்தமாக பயணிகள் ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆட்டோவை வீட்டு முன் நிறுத்தி விட்டு பார்த்தீபன் தூங்க சென்றார். நேற்று காலை பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்தீபன் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை முடுக்கி விட்டனர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து துப்பு துலக்கியதில் ஆட்டோ திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று ஆட்டோவையும், அதை திருடிச்சென்ற ஆசாமியையும் பிடித்தனர். விசாரணையில் அவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த நவீன்குமார் (23) என்பதும், கள்ளச்சாவி போட்டு ஆட்டோவை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நவீன்குமாரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்