ஆட்டோ திருட்டு; வாலிபர் கைது

மயிலாடுதுறையில் ஆட்டோ திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-31 18:45 GMT

மயிலாடுதுறையில் ஆட்டோ திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆட்டோ திருட்டு

மயிலாடுதுறை திருவிழந்தூர் தோப்புத் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது33). இவர் தனது உறவினருக்கு சொந்தமான ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் காமராஜர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் பகுதியில் மணிகண்டன் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு அருகில் இருந்த டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது மணிகண்டன் ஓட்டி வந்த ஆட்டோவை மர்மநபர் ஒருவர் போலி சாவி போட்டு ஸ்டார்ட் செய்து ஓட்டிச்சென்றார். இதைக் கண்ட மணிகண்டன் ஓடி சென்று ஆட்டோவை தடுத்து நிறுத்தி கூச்சலிட்டார்.

கைது

உடனே அருகில் இருந்த சக ஆட்டோ டிரைவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆட்டோைவ திருடி ஓட்டிச்சென்ற மர்ம நபரை பிடித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா குண்டியமுள்ளூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த பாலாஜி மகன் கலியமூர்த்தி (22) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்