ஆட்டோ திருட்டு

Update: 2023-05-21 18:45 GMT

தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டி வினோபா நகரை சேர்ந்தவர் வாசி நாதன் (வயது 50). இவர், சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர், ஆட்டோவை தனது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றார். இந்நிலையில் நேற்று கலை எழுந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தில் தேடினார். ஆனால் ஆட்டோ கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் தேவதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்