மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன அங்காடி தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன அங்காடி வழங்கபடவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2023-07-04 19:09 GMT

விருதுநகர்

மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன அங்காடி வழங்கபடவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:

மதி எக்ஸ்பிரஸ்

மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார மேம்பாட்டிற்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய பகுதிகளில் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் வாகனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைப்பதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் மூன்று இடங்களில் மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடிகள் திறக்கப்பட உள்ளது.

விதிமுறைகள்

விதிமுறைகளுக்குட்பட்டு தகுதியான மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சுயஉதவி குழுவைச்சேர்ந்த மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மட்டுமே விற்பனை வாகன அங்காடி வழங்கப்படும். முன்னுரிமை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட விதவை, மகளிர் மாற்றுத்திறனாளிகள், ஆண் மாற்றுதிறனாளிகள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் உறுப்பினராக உள்ள சிறப்பு சுய உதவி குழு அந்த ஊராட்சி அளவிலான கட்டமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் உறுப்பினர் சிறப்பு சுய உதவி குழு ஊராட்சிக்கான கூட்டமைப்பு உறுப்பினராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளிகள் சார்ந்த சுய உதவி குழு தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையத்தில் பதிவு பெற்றிருத்தல் அவசியமாகும். சிறப்பு சுய உதவி குழு தொடங்கி ஓராண்டுக்கு மேல் பூர்த்தி செய்து இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

தேர்வு செய்யப்படும் உறுப்பினர் மீது எவ்வித புகார்களும் இல்லை என்பதையும் வங்கி மற்றும் சமுதாய அமைப்புகளின் வாராக்கடன ஏதும் இல்லை என்ற சான்றிதழ் வழங்கிட வேண்டும்.

விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற 12-ந்தேதிக்குள் திட்ட இயக்குனர் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட ஊராட்சி முகமை வளாகம் என்ற முகவரிக்கு விண்ணப்பம் அனுப்பலாம். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்