ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

Update: 2023-04-05 17:56 GMT

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முகமது அலி (வயது 39). ஆட்டோ டிரைவரான இவர் திருச்சி-தஞ்சை மெயின்ரோட்டில் அரியமங்கலம் பகுதியில் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஆட்டோ திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த முகமதுஅலியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்