ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
தியாகதுருகத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி தாய், தந்தை படுகாயம்
கண்டாச்சிமங்கலம்
உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் குப்பன் மகன் அருள்செல்வன்(வயது 32). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று அவரது தந்தை குப்பன்(58), தாய் லட்சுமி(55) ஆகியோரை சொந்த வேலைகாரணமாக ஆட்டோவில் அழைத்துக்கொண்டு தியாகதுருகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தியாகதுருகம் காந்திநகர் அருகே வந்தபோது எதிரே வந்த லாரியின் மீது மோதாமல் இருப்பதற்காக அருள்செல்வன் திடீரென பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அருள்செல்வன், குப்பன், லட்சுமி ஆகியோரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அருள்செல்வன் பரிதாபமாக இறந்தார். அவரது பெற்றோருக்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.