ஆட்டோ -மோட்டார்சைக்கிள் மோதல் டிரைவர் பலி
ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பலியானார்.
மோகனூர்,
மோகனூர் அருகே உள்ள கீழபேட்டப்பாளையத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 36). லாரி டிரைவர். இவர் கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி மோட்டார் சைக்கிளில் நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நின்ற ஆட்டோ மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நாச்சிமுத்து சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ேமாகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.