மீட்டர் கட்டணத்தை உயர்த்தக்கோரி ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

மீட்டர் கட்டணத்தை உயர்த்தக்கோரி ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-11 20:18 GMT

நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க பேரவை மற்றும் திருச்சி அனைத்து மீட்டர் (தனி) ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள் இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடந்தது. திருச்சி மண்டல செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் அப்துல்லாசா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தொழிற்சங்க பேரவை மாநில தலைவர் அன்பு தென்னரசன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில் கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதிக அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். 60 வயதை கடந்த டிரைவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். வீட்டுமனை இல்லாத ஆட்டோ டிரைவர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். மீனவர்களுக்கு வழங்குவது போல் மானிய விலையில் எரிபொருள் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்