ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து

ஆறுமுகநேரி அருகே ஆட்டோ டிரைவரை தாக்கி, கத்தியால் குத்திய வழக்கில் இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-26 12:56 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி கீழ சண்முகபுரம் பகுதியில் வசித்து வருபவர் வேலாயுதம் மகன் பாலமுருகன் (வயது 40). ஆட்டோ டிரைவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் பாலமுருகன் சகோதரி மகன் சுடலைமணிக்கும், வேறு சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது அங்கு வந்த பாலமுருகன், சுடலைமணியை கண்டித்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கீழநவ்வழடிவிளை யைச் சேர்ந்த சின்னத்திரை மகன் முத்துப்பாண்டி (22), கீழ சண்முகபுரம் பொன்முத்து மகன் சிவம், ஆகிய இருவரும் மதுபோதையில் பாலமுருகன் வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர். எங்களிடம் பேசிக்கொண்டிருந்த சுடலைமணியை கண்டித்து அனுப்பிய ஏன்? என கேட்டு பாலமுருகனிடம் தகராறு செய்தனர். தகராறு முற்றியதில் சிவம் கல்லால் தாக்கியதில் ரத்த காயமடைந்த பாலமுருகன் வீட்டிற்குள் ஓடியுள்ளார். அவரை துரத்தி சென்ற முத்துப்பாண்டி கத்தியால் முதுகில் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த பாலமுருகன் மற்றும் குடும்பத்தினரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்துள்ளனர். இதை பார்த்தவுடன் சிவமும், முத்துப்பாண்டியும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயமடைந்த பாலமுருகன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகுமார் வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டி, சிவம் ஆகிய 2பேரையும் கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்