மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பலி
பாவூர்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பலியானார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூரில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன் மகன் சாமிநாதன் என்ற முருகன் (வயது 36). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று சாலைப்புதூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள இறைச்சி கடைக்கு சென்ற அவர், அங்குள்ள இரும்பு கம்பி ஒன்றை பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சாமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று சாமிநாதன் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான சாமிநாதனுக்கு கற்பகம் என்ற மனைவியும், பிரியா என்ற மகளும் உள்ளனர்.