தூக்குப்போட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை

பூட்டிய வீட்டில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-14 20:04 GMT

விருதுநகர் அல்லம்பட்டி மாத்திநாயக்கன்பட்டி ரோட்டில் வசிப்பவர் நாகேஸ்வரி (வயது 65). இவரது மகன் வசந்த்ராஜ் (35). ஆட்டோ டிரைவரான இவர் நோய் பாதிப்பால் திருமணம் செய்யாத நிலையில் மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வசந்த்ராஜ் தனது தாயாருடன் வாக்குவாதம் செய்து அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். நாகேஸ்வரி தன் மகள் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து காலையில் வந்து பார்த்தபோது வீடு திறக்காத நிலையில் நாகேஸ்வரி வீட்டு உரிமையாளரிடம் மாற்று சாவி வாங்கி வீட்டை திறந்து பார்த்தார். அப்போது படுக்கை அறையில் வசந்த் ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து நாகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்