ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லை அருகே ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-06-03 20:02 GMT

நெல்லை:

நெல்லை அருகே சீவலப்பேரி உலகம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முண்டசாமி (வயது 30). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த முண்டசாமி நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்