ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
களியக்காவிளை அருகே மனைவி கோபித்துக்கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றதால் ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே மனைவி கோபித்துக்கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றதால் ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆட்டோ டிரைவர்
களியக்காவிளை அருகே உள்ள அன்னிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் அனில் குஞ்சன் (வயது 52), ஆட்டோ டிரைவர். இவருக்கு அனிமோள் என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
அனில் குஞ்சனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. மேலும், அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள் ளார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அனில்குஞ்சன் மது குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால், மன வருத்தத்தில் இருந்த அவருடைய மனைவி அனிமோள், கோபித்துக்கொண்டு மகன்களுடன் உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.
மனைவி கோபித்து சென்றதால் வீட்டில் தனியாக வசித்து வந்த அனில்குஞ்சன் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
தற்ெகாலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அனில்குஞ்சன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதைகண்ட அக்கம்பக்கத்தினர் இதுபற்றி களியக்காவிளை போலீசாருக்கு தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அனில்குஞ்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவி கோபித்துக்கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றதால் ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.