ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை

கோவில்பட்டி அருகே ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-12-09 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில், ஆட்ேடா டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவருடைய உடல் கண்மாயில் கிடந்தது. போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

காயங்களுடன் பிணம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள ஆலம்பட்டி கண்மாயில் காயங்களுடன் ஆண் பிணம் கிடப்பதாக, மேற்கு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்- இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு கிடந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது பற்றி தீவிரமாக விசாரித்தனர்.

ஆட்டோ டிரைவர்

பிணமாக கிடந்தவர் உடலில் கம்பால் அடித்த காயங்கள் இருந்தன. எனவே, அவரை மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் கயத்தாறு அருகே உள்ள சிவஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கணேசன் (வயது 41) என்பதை கண்டுபிடித்தனர்.

இவர் டிராக்டர் மற்றும் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கோவில்பட்டி வீர வாஞ்சி நகரில் குடியிருந்து வந்தார். இந்த நிலையில் அவர் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு, கண்மாயில் பிணமாக வீசப்பட்டுள்ளார்.

விசாரணை

போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

கணேசன் ஆலம்பட்டி கண்மாயில் வைத்து அடித்துக் கொல்லப் பட்டாரா? அல்லது வேறு எங்காவது வைஅவரை கொலை செய்து உடலை கொண்டு வந்து மர்ம நபர்கள் கண்மாயில் போட்டு விட்டு சென்றார்களா? என்பது பற்றி போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவில்பட்டியில் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்