போக்சோ வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது

போக்சோ வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்;

Update: 2023-09-22 00:32 GMT

அலங்காநல்லூர்,

மதுரை சமயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (வயது 31). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதும்பு கிராமத்தில் நடந்த கோவில் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் சிறுமியை ஏமாற்றி ஆசை வார்த்தை கூறி மாதவன் அழைத்துச் சென்று விட்டார். இது பற்றி தகவல் தெரிந்த பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்தார். இதில் அந்த சிறுமிக்கு வயது 17 என்ற காரணத்தினால், இந்த சிறுமியை கடத்திய சம்பவத்தில் ஈடுபட்ட மாதவன் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்