போக்சோவில் ஆட்டோ டிரைவர் கைது

போக்சோவில் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-21 18:45 GMT

தேனி பவர் ஹவுஸ் தெருவை சேர்ந்த கர்ணன் மகன் ஜெயச்சந்திரன் (வயது 26). ஆட்டோ டிரைவர். இவர் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை அடிக்கடி பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்தார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் ஜெயச்சந்திரனை கண்டித்தனர். இந்நிலையில் அந்த மாணவி தனது உறவினருடன் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற ஜெயச்சந்திரன் மாணவியிடம் தகராறு செய்து அவரின் ஆடையை பிடித்து இழுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாயார் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயச்சந்திரனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்