பள்ளி மாணவி கடத்தல்; போக்சோ சட்டத்தில் ஆட்டோ டிரைவர் கைது

பள்ளி மாணவியை கடத்திய வழக்கில் ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-29 13:48 GMT

சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுழிபட்டியை சேர்ந்தவர் சங்கிலிமுருகன் (வயது 28). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 20-ந்தேதி பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து சங்கிலி முருகனை கைது செய்தனர். மேலும் மாணவியை போலீசார் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்