தர்மபுரி அருகே பள்ளி வளாகத்தில் சுற்றித்திரிந்த எறும்புத்தின்னி வனத்துறையிடம் ஒப்படைப்பு

Update: 2022-11-20 18:45 GMT

தர்மபுரி அருகே வே.முத்தம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் எறும்புத்தின்னி ஒன்று சுற்றித்திரிந்தது. இதனை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் தர்மபுரி சரக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே தர்மபுரி வனச்சரகர் அருண் பிரசாத் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த எறும்புத்தின்னியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத தொப்பூர் வனப்பகுதியில் அந்த எறும்புத்தின்னியை வனத்துறையினர் விட்டனர்.

இந்த எறும்புத்தின்னி ஒரு ஆண்டுக்கு 7 கோடி பூச்சி புழுக்களை தின்னும் தன்மை கொண்டது. பாலூட்டி வகையை சார்ந்தது மற்றும் பாலூட்டிகளில் உடல் மீது செதில்கள் கொண்ட ஒரே உயிரினம். வாழ்வின் விளிம்பு நிலைகளில் உள்ள உயிரினம் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்