போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 363 வாகனங்கள் ஏலம்

வேலூரில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 363 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.

Update: 2023-08-07 19:06 GMT

வேலூர் மாவட்டத்தில் திருட்டு, சாராயக் கடத்தல் போன்ற குற்றச் சம்பவங்களில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பில் வைத்திருந்தனர். இதுதவிர கேட்பாரற்றுக் கிடந்த வாகனங்களையும் மீட்கப்பட்டு போலீசார் வைத்திருந்தனர்.

இந்த வாகனங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் உரிமையாளர்கள், சட்ட விதிகளுக்கு உட்பட்டு பெற்றுச் செல்லலாம். ஆனால் பல மாதங்களால் யாரும் உரிமைக்கோராமல் இருந்ததால் அந்த வாகனங்கள் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நேற்று ஏலம் விடப்பட்டன. அதில் 362 இருசக்கர வாகனங்களும், 1 ஆட்டோவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் ஏலம் விடப்பட்டன. அந்த வாகனங்களை பலர் போட்டிப்போட்டு வாங்கி சென்றனர்.

ஏல நிகழ்ச்சியில் பங்ேகற்றவர்களுக்கு ரூ.100 பெறப்பட்டு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டன. மொத்தத்தில் 570 டோக்கன்கள் வழங்கப்பட்டு வாகனங்கள் ஏலம் விடப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்