மாநிலம் முழுவதும் கரும்பு ஆலைகள் முன்பு 22-ந் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மாநிலம் முழுவதும் கரும்பு ஆலைகள் முன்பு 22-ந் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிா்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளா்கள் கூட்டம் திருச்சி பொியமிளகுபாறையில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவா் குணசேகரன் தலைமை தாங்கினார். மாநில பொதுசெயலாளா் மாசிலாமணி, மாநில துணை செயலாளர் இந்திரஜித், மாவட்ட செயலாளர் சிவசூரியன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தஞ்சையில் நீதி கேட்டு கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வருகிற 22-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள கரும்பாலைகள் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, மழை வெள்ள பாதிப்பிற்கேற்ப விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அளவில் வழிபாட்டு நிறுவனங்கள், தர்மஸ்தாபனங்கள், மடம் மற்றும் சத்திரம் ஆகிய நிலங்களின் குத்தகை சாகுபடியாளர்கள், குடியிருப்பாளர்கள் நில உரிமை பாதுகாப்பு மாநாட்டை மயிலாடுதுறையில் அடுத்து மாதம் 5-ந் தேதி நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.