கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-30 19:12 GMT

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விராலிமலை தாலுகா அலுவலகத்தின் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு விராலிமலை வட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், பயணப்படியை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், நிர்வாக காரணங்களால் காலதாமதமாக நில அளவை மற்றும் நிர்வாக பயிற்சி வழங்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளில் தகுதிகாண் பருவத்திற்கான ஆணையை வெளியிட வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு 6 ஆண்டுகளில் 30 சதவீதம் என்பதை 3 ஆண்டுகளில் 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை ஊக்க ஊதிய உயர்வை 6 மற்றும் 12 ஆண்டுகளில் வழங்க வேண்டும், பேரிடர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ளும் வருவாய் துறையின் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்