அரசு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-07-11 19:24 GMT

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் சகாதேவன், ஜீவானந்தம், அல்போன்ஸா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பழனிச்சாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருச்சி மாவட்ட மையத்தின் சார்பில் நேற்று மாலை ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுடன் மூன்று அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்திற்கு சத்துணவு ஊழியர்களை பயன்படுத்த வேண்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் 4.50 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். முடிவில் திருச்சி வட்ட கிளை தலைவர் சுரேஷ்பிரபு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்