பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்த வாலிபர் சிக்கினார்.

Update: 2023-02-16 21:43 GMT

வடக்கன்குளம்:

பழவூர் அருகே உள்ள சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 33). இவர் சம்பவத்தன்று ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் ஜன்னல் வழியாக தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது, கண் விழித்த அந்த பெண் திருடன் திருடன் என்று கூச்சலிட்டதால், ராஜா தப்பிச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து பழவூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ராஜாவை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்