ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி; 2 பெண்கள் கைது

நெல்லையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-07-19 20:51 GMT

நெல்லை கொக்கிரகுளத்தில் இருந்து ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று அரசு பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ்சில் கொக்கிரகுளத்தை சேர்ந்த பெண் ஒருவர் பயணம் செய்தார். அதே பஸ்சில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதனை பார்த்த சக பயணிகள் அந்த இளம்பெண்ணையும், அவருடன் வந்த மற்றொரு பெண்ணையும் பிடித்து பாளையங்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் பேட்டை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஆனந்த் மனைவி பாண்டிச்செல்வி என்ற வள்ளி (வயது 23), சிவகங்கை மாவட்டம் மானா மதுரை சிப்காட் காலனி பகுதியை சேர்ந்த சிங்கராஜ் மனைவி மகேஷ்வரி (27) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்