அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி

கோவை ஆர்.எஸ்.புரத்தில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் பிடிப்பட்டார்.

Update: 2023-01-10 18:45 GMT

ஆர்.எஸ்.புரம்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 35 வயதான பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவில் அந்த பெண் ஒரு அறையிலும், கணவர் மற்றொரு அறையிலும் படுத்து இருந்தனர்.

அப்போது அந்த வீட்டுக்குள் புகுந்த நபர் ஒருவர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். உடனே அந்த பெண் கூச்சலிட்டதால், அந்த வாலிபர் தப்பி ஓடினார். அப்போது அந்த நபர் படிக்கட்டில் வேகமாக ஓடியபோது, தவறி விழுந்தார். இதில் அந்த நபருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.இதையடுத்து அந்த நபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண் கோவை மேற்கு மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த விஜய் (35) என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்