விக்கிரவாண்டி அருகேகோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி

விக்கிரவாண்டி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது.

Update: 2023-03-15 18:45 GMT

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை கடப்பாரையால் உடைத்து, அதில் இருந்த காணிக்கை பணத்தை திருட முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் உண்டியலை உடைக்க முடியாததால், திருட்டு முயற்சியை கைவிட்டு, அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து கோவில் தர்மகத்தா கார்த்திகேயன் கொடுத்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்