ரேஷன் அரிசி கடத்த முயற்சி
லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நெல்லை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டா் கார்த்திகேயன் மற்றும் போலீசார், முக்கூடல் பாலன் தெருவில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கோவில் அருகில் 2 மர்மநபர்கள் லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது போலீசார் வந்ததை பார்த்த அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
விசாரணையில் அவர்கள் முக்கூடல் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த கணேசன், செல்வகுமார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் லோடு ஆட்டோவில் இருந்த சுமார் 1,500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.