லோயர்கேம்பில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயற்சி:200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்:வாலிபர் கைது
லோயர்கேம்பில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 200 கிேலா ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கூடலூர் அருகே லோயர்கேம்பில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லோயர்கேம்ப் பஸ் நிறுத்தம் அருகே குமுளி நோக்கி ஸ்கூட்டரில் மூட்டைகளுடன் ஒருவர் வேகமாக வந்தார். அவரை மறித்து போலீசார் சோதனை செய்தனர்.
அதில். மூட்டைகளில் 200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், லோயர்கேம்ப் எல்.எப்.ரோடு பகுதியை சேர்ந்த ராஜா (வயது 35) என்பதும், லோயர்கேம்பில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.