கருங்கல் அருகே குருசடியில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி

கருங்கல் அருகே குருசடியில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.

Update: 2022-10-30 18:38 GMT

கருங்கல்:

கருங்கல் அருகே நீர்வக்குழி சந்திப்பில் மிடாலக்காடு நல்லாயன் ஆர்.சி.சர்ச்சுக்கு சொந்தமான குருசடி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் குருசடிக்கு சென்றவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலின் இரண்டு பூட்டுகளில் ஒன்று ஒடைக்கப்பட்டு இருப்பதை கண்டனர். யாரோ மர்ம நபர் நள்ளிரவில் உண்டியலை உடைக்க முயன்றதும், அதில் ஒரு பூட்டு உடைக்கப்பட்டும், மற்றொன்றை உடைக்க முடியாததால் அப்படியே விட்டு விட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. பின்னர், இதுபற்றி கருங்கல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்