நகைப்பட்டறையில் கொள்ளை முயற்சி
நகைப்பட்டறையில் முகமூடி அணிந்து கொள்ளையடிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்
கோவை பொன்னையராஜபுரம், சொக்கம்புதூரை சேர்ந்தவர் விஷால் (வயது31).
பெரியகடை வீதியில் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். அங்கு விஷால் தனது மாமா ரவி மற்றும் ஜிதேந்தர் ஆகியோருடன் இரவில் இருந்தார்.
அப்போது முகமூடி அணிந்த மர்ம ஆசாமி ஒருவர் திடீரென்று நகைப் பட்டறைக்குள் புகுந்தான்.
அவனை பார்த்த உடன் நகைப்பட்ட றையில் இருந் தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது முகமூடி ஆசாமி தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டினான்.
மேலும் நகைப்பட்டறையில் பொருட்களை கொள்ளை யடிக்க முயன்றான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஷால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முகமூடி ஆசாமியை மடக்கி பிடித்து, பெரியகடை வீதி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில் முகமூடி அணிந்து கொள்ளையடிக்க முயன்றது, ராஜவீதியை சேர்ந்த சுரேஷ் (53) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.