நகைக்கடையில் கொள்ளை முயற்சி

நகைக்கடையில் கொள்ளை முயற்சி நடைபெற்றது.

Update: 2023-10-21 19:32 GMT

பெரம்பலூரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 43). இவர் திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரத்தில் உள்ள துறையூர்-தம்மம்பட்டி சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்ததும் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலையில் மீண்டும் கடையை திறக்க வந்தார். அப்போது, கடையின் ஷட்டரில் கியாஸ் வெல்டிங் எந்திரத்தால் துளையிட முயற்சி செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், செபாஸ்டின், சந்தியாகு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். கேமராவில் மர்ம நபர்கள் பெயிண்ட் ஸ்பிரே அடித்திருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்