கைக்குழந்தைகளுடன் வந்த பெண் தீக்குளிக்க முயற்சி

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கைக்குழந்தைகளுடன் வந்த பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-08-10 18:10 GMT

தீக்குளிக்க முயற்சி

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி செல்வி (வயது 38). இவர்களுக்கு 2 கைக்குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தனது கணவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது கொழுந்தனார் மற்றும் மாமனார் ஆகியோர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறி இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது கைக்குழந்தைகளுடன் செல்வி வந்தார்.

பின்னர் அவர் மாவட்ட கலெக்டரை சந்திக்க வேண்டும் என்று அங்கிருந்த அலுவலர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரை அரசு அலுவலர்கள் மற்றும் போலீசார் அங்கு அமர வைத்துள்ளனர். அப்போது திடீரென தனது கைப்பையில் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து செல்வி குடித்து விட்டு, தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

பரபரப்புபுதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கைக்குழந்தைகளுடன் வந்த பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை பார்த்த அரசு அலுவலர்கள் மற்றும் போலீசார் அவரிடம் இருந்து பாட்டிலை பறித்து கொண்டு அவரை ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அதிர்ஷ்டவசமாக செல்வி மட்டுமே பெட்ரோலை குடித்துள்ளார். தனது குழந்தைகள் மீது பெட்ரோலை ஊற்றி இருந்தால் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்