பச்சையம்மன் கோவிலில் சாமி சிலைகளை திருட முயற்சி
பச்சையம்மன் கோவிலில் சாமி சிலைகளை திருட முயற்சி நடந்துள்ளது.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஓலைப்பாடி கிராமத்தில் மன்னார் சுவாமி பச்சையம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் வைக்கப்பட்டு உள்ள சாமி சிலையை திருடுவதற்கு மர்ம நபர்கள் நேற்று முன்தினம் அதிகாலை வந்துள்ளனர். அங்கு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதை அறிந்து, கண்காணிப்பு கேமராக்களின் மெயின் சுவிட்சை அணைத்துவிட்டு கடப்பாரை மற்றும் ஆயுதங்களை கொண்டு மரக்கதவுகளை உடைத்து திறக்க முயன்றுள்ளனர். ஆனால் கோவிலின் கதவுகளை உடைக்க முடியாததால் திரும்பி சென்றனர். இதனால் சாமி சிலைகள் தப்பின. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.