ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் நகையை பறிக்க முயற்சி
கிருஷ்ணகிரியில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரியில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
நகையை பறிக்க முயற்சி
கிருஷ்ணகிரி பாரீஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர். இவரது மனைவி பாக்யமேரி (வயது 49). இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகில் ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க 2 பேர் மோட்டார்சைக்கிளில் பாக்யமேரியை பின் தொடர்ந்து வந்தனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்த நபர்கள் பாக்யமேரி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சுதாரித்து ஸ்கூட்டரை நிறுத்தி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை கையால் இருக பிடித்து கொண்டார்.
போலீசார் விசாரணை
பின்னர் திருடன், திருடன் என அவர் கூச்சலிட்டார். இதனால் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பாக்யமேரி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குப்பதிவு செய்து நகையை பறிக்க முயன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.