திருவள்ளூரில் சந்தன மரங்களை வெட்டி ஆந்திராவுக்கு கடத்த முயற்சி - 3 பேர் கைது

சந்தன மரங்களை வெட்டி ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Update: 2024-08-23 16:27 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சந்தன வேணுகோபாலபுரம் ஊராட்சியில் உள்ள காப்பு காட்டில், சந்தன மரங்களை வெட்டி ஆந்திராவிற்கு கடத்த முயற்சித்த கணேசன், ரவி, ஏழுமலை ஆகிய 3 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 10 கிலோ சந்தன மரம், கத்தி, மற்றும் ரம்பம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் தப்பியோடிய ராசுக்குட்டி என்பவரை தேடி வருவதாக திருத்தணி வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்