பள்ளி அருகே செல்போன் கோபுரம் அமைக்க முயற்சி

தெற்கு கரையூர் பள்ளி அருகே செல்போன் கோபுரம் அமைக்க முயற்சி நடப்பதை பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

Update: 2023-06-19 18:45 GMT

ராமேசுவரம் தெற்கு கரையூர், சேராங்கோட்டை, கரையூர், சேதுபதி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்கள் கிராம தலைவர் சேகர் தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தெற்கு கரையூர் மீனவ கிராமத்தில் 200-க்கும் அதிகமான வீடுகளில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகிறோம். இக்கிராமத்தை ஒட்டி அரசு பள்ளி அமைந்துள்ளது. இதில் ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு அருகில் குறைந்தபட்சம் 100 மீட்டர் தொலைவில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என்ற விதியை மீறி தனியார் நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைக்க முயன்று வருகிறது.

இதன் பாதிப்பை கருத்தில் கொண்டு எங்கள் சார்பில் தொடர் முயற்சியின் பயனாக செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மேற்கண்ட நிறுவனம் எங்களின் எதிர்ப்பையும் உண்மை நிலையையும் மறைத்து கோர்ட்டு மூலம் அனுமதி பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த விஷயத்தில் எங்கள் தரப்பினரின் கருத்தை கேட்க தவறியதோடு, அதுகுறித்த விஷயங்களையும் சொல்ல தவறிவிட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் எங்களின் பாதிப்பை உரிய முறையில் தெரிவிக்க தவறிவிட்டனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக எங்களின் பாதிப்பைகருத்தில் கொண்டு செல்ேபான் கோபுரம் அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்