போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: தமிழ்ப்புலிகள் கட்சியினர் 30 பேர் கைது

தேனியில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தழிழ்ப்புலிகள் கட்சியினர் 30 பேரை போலீசார் ைகது செய்தனர்

Update: 2022-07-23 16:06 GMT

தேனி மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் சிலரை கண்டித்து, தமிழ்ப்புலிகள் கட்சியினர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதற்காக அவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தடையை மீறி ஊர்வலமாக வந்தனர். பின்னர் முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து மாநில இளம்புலிகள் அணி செயலாளர் தலித்ராயன் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்