நாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயற்சி

நாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயற்சி நடந்தது.

Update: 2022-06-07 19:20 GMT

நாகர்கோவில், ஜூன்.8-

நாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயற்சி நடந்தது.

மறியல் செய்ய முயற்சி

இரணியல் அருகே வடக்கு பேயன்குழி பகுதியில் உடனடியாக ரெயில்வே பாலம் கட்ட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு (விடுதலை) சார்பில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் 7-ந் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி முத்து தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் ரெயில் நிலையத்தில் திரண்டனர்.

முன்னதாக ரெயில் மறியலில் ஈடுபட முயல்பவர்களை தடுப்பதற்காக ரெயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ரெயில்வே இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா, கோட்டார் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பேரிகார்டுகள் வைத்து தடுப்பு வேலியும் அமைத்திருந்தனர்.

எனினும் தடையை மீறி மறியல் போராட்டம் நடத்துவதற்காக மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். ஆனால் அவர்களை ரெயில் நிலையத்துக்குள் செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து ரெயில் மறியல் போராட்டம் செய்யும் முயற்சியை கைவிட்டு விட்டு மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ரெயில்வே பாலம் கட்ட வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்