மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளியை போலீசார் மீட்டு காப்பாற்றினர்

Update: 2022-06-06 14:54 GMT

கோவை

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளியை போலீசார் மீட்டு காப்பாற்றினர்.

குறை தீர்க்கும் கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக் கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பிக் கொண்டு இருந்தனர்.

கலெக்டர் அலுவலகத்தையொட்டி இரும்புத் தடுப்புகள் போடப்பட்டு இருக்கும் இடத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார் விரைந்து சென்று மண்எண்ணெய் பாட்டிலை பறித்து அவரை மீட்டனர்.

தீக்குளிக்க முயற்சி

பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினார்கள் விசாரணையில் அவர், மேட்டுப்பாளையம் ஸ்ரீசிங்கராய ஓடையை சேர்ந்த முகமது சாதிக் இப்ராகிம் (வயது 34) என்பதும்,

அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது. அவர் போலீசாரிடம் கூறுகையில், மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் வாடகை கட்டிடத்தில் அலுவலகம் அமைத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன்.

அந்த அலுவலகத்தை உடனே காலி செய்யுமாறு சிலர் மிரட் டல் விடுக்கிறார்கள். மேலும் அலுவலக பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.

உரிய நடவடிக்கை

இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வேறுவழியின்றி தற்கொலை க்கு முயன்றேன். எனவே சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பின்னர் அவருக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். இதையடுத்து அவர், கலெக்டர் சமீரனை சந்தித்து மனு கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்