வியாபாரியிடம் பணம் பறிக்க முயற்சி; தொழிலாளி கைது
நெல்லையில் வியாபாரியிடம் பணம் பறிக்க முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வியாபாரி நவாஸ்கான் (வயது 30) என்பவர் பஸ் ஏறுவதற்காக காத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் நவாஸ்கான் சட்டை பையில் இருந்து ரூ.500-ஐ பறிக்க முயன்றார். சுதாரித்து கொண்ட நவாஸ்கான், அவரை கையும் களவுமாக பிடித்து அங்கிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இதுதொடர்பாக மேலப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வின் விசாரணை நடத்தினார். அதில் திருட முயன்றவர் தூத்துக்குடியை சேர்ந்த அப்துல் அஜிஸ் (55), தொழிலாளி என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.