மாமனாரை வெட்ட முயற்சி; வாலிபர் கைது

கடையநல்லூர் அருகே மாமனாரை வாளால் வெட்ட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-05-27 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் புதுமனை தெருவை சேர்ந்தவர் உச்சிமாளி மகன் மகேந்திரன் (வயது 26). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அப்ரானந்தம் என்பவரின் மகளுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அப்ரானந்தம் தனது மகளை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்.

இதனால் விரக்தி அடைந்த மகேந்திரன் நேற்று மாமனார் அப்ரானந்தத்தை வாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்தவர்கள் மகேந்திரனை மடக்கிப்பிடித்து அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்