குளத்தில் மரங்களை வெட்டி கடத்த முயற்சி
விருத்தாசலம் அருகே குளத்தில் இருந்த மரங்களை சிலர் வெட்டி கடத்த முயன்றனர்.;
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த முகுந்தநல்லூர் கிராமத்தில் தர்ம குளம் உள்ளது. இந்த குளத்தில் இருந்த புளியமரம், வேப்பமரம் உள்ளிட்ட மரங்களை சிலர் வெட்டி கடத்த முயற்சி செய்வதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து விருத்தாசலம் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சிலர் குளத்தில் இருந்த மரங்களை வெட்டி டிராக்டரில் ஏற்றி கடத்த முயன்றனர். அவர்கள், அதிகாரிகளை பாாத்தவுடன் டிராக்டரை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றனர். இதையடுத்து அங்கு நின்ற டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மரங்களை வெட்டி கடத்த முயன்றது யார் என்பது பற்றி தாசில்தார் அந்தோணிராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.