ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி

Update: 2022-07-10 19:16 GMT

பேராவூரணி:

பேராவூரணியில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடைபெற்றது. கண்காணிப்பு கேமராவில பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட நாட்டாணிக்கோட்டை வாட்டர் டேங்க் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது70). ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களது மகள் பெங்களூரில் வசித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெங்கட்ராமன் பெங்களூரு சென்று விட்டார்.

செங்கமங்கலம் பகுதியை சேர்ந்த காவலாளி ஒருவர் பகல் நேரத்தில் மட்டும் வந்து வெங்கட்ராமன் வீட்டை பார்வையிட்டு செல்வது வழக்கம். மேலும் வீட்டை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. நேற்று காலை பெங்களூருவில் இருந்த வெங்கட்ராமனின் மகள், கண்காணிப்பு கேமராவை தனது மொபைல் மூலம் கண்காணித்தார். அப்போது அதிகாலை 2.20 மணிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி

இதுகுறித்து அவர் நாட்டாணிக்கோட்டை பகுதியை சேர்ந்த சிலருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் அங்கு சென்று பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. தகவல் அறிந்ததும் பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் விசாரணை நடத்தினர். கேமராவில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றது பதிவாகி இருந்தது.

விசாரணை

பெங்களூருவில் இருந்து வெங்கட்ராமன் திரும்பிய பிறகு தான் பொருட்கள் ஏதேனும் திருட்டு போனதா என தெரியவரும். ஏற்கனவே இதே வீட்டில் இரண்டு முறை கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து திருட முயன்றது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேராவூரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்