ஊராட்சி மன்ற தலைவர், மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி

கடலூா் முதுநகாில் இடைத்தோ்தல் வாக்குப்பதிவின் போது ஊராட்சி மன்ற தலைவர், தனது மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-07-09 19:07 GMT

கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகர் அருகே உள்ள சான்றோர்பாளையத்தில் 9-வது வார்டு உறுப்பினர் இறந்து விட்டார். இதனால் அந்த வாா்டு உறுப்பினா் பதவிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் 4 பேர் போட்டியிட்டனா். இந்த நிலையில் நேற்று மாலை சான்றோர் பாளையம் (முதுநகர் என்.எம்.பி.எல்.) ஊராட்சி மன்ற தலைவர் பிரசன்னா, ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, சிலர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

போலீஸ் குவிப்பு

இதில் மனமுடைந்த பிரசன்னா மற்றும் அவரது மனைவி கோமதி ஆகியோர் தங்கள் மீது மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனா். பின்னா் அவா்கள் சாலையில் அமர்ந்தனா். இதற்கிடையே அங்கு வந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் தலைமையிலான போலீசார் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

மேலும் அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வகையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்