விவசாயியை தாக்கி கொலை மிரட்டல்

மது குடிக்க பணம் தராததால் விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-03 17:51 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் அன்னுக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது87). விவசாயி. இவரிடம் அதே பகுதியில் வசிக்கும் அவரது மருமகன் தீனதயாளன் (49) என்பவர் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு மாமனார் சீனிவாசன் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மருமகன் தீனதயாளன், சீனிவாசனை கீழே பிடித்து தள்ளிவிட்டு கையால் அடித்து, தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனதயாளனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்