மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல்

மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல்

Update: 2023-07-15 18:45 GMT

சிவகாசி

சாத்தூர் பெரியகொல்லப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் மனைவி ராஜலட்சுமி (வயது 60). இவருக்கும் இவரது உறவினரான இருக்கன்குடியை சேர்ந்த திருமூர்த்தி என்பவருக்கும் சொந்தமான பொதுவீடு உள்ளது. இந்த வீட்டிற்கு சம்பவத்தன்று திருமூர்த்தி ஒரு பெண்ணை அழைத்து வந்து தங்க முயன்றுள்ளார். இதற்கு ராஜலட்சுமி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் திருமூர்த்தி அந்த பெண்ணுடன் திரும்பி சென்று விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து ராஜலட்சுமியிடம் தகராறு செய்து அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ராஜலட்சுமி இருக்கன்குடி போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் திருமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்