முதியவரை தாக்கிய 12திருநங்கைகள் மீது வழக்கு

முதியவரை தாக்கிய 12திருநங்கைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-11-17 18:45 GMT

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 65). இவர் பழைய பஸ்நிலையம் அருகே வந்த போது, திருநங்கைகள் சிலர் அவரிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் மறுத்ததால் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஜெகதீசனை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த ஜெகதீசன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய 12 திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்