கண்மாயில் மீன்பிடித்த வாலிபர்கள் மீது தாக்குதல்

கண்மாயில் மீன்பிடித்த வாலிபர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக வீடியோ பரவியது.;

Update: 2023-07-22 19:11 GMT

ராஜபாளையம், 

ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு கண்மாயில் ஒரு பிரிவினர் குத்தகைக்கு எடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த மற்ெறாரு பிரிவினர் கண்மாயில் மீன் பிடித்ததாகவும், மீன்பிடித்த வாலிபர்களை மற்றொரு தரப்பினர் கட்டையால் தாக்குவதை போன்று வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்