தேர்தல் முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல்

தேர்தல் முன்விரோதத்தில் வாலிபரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-06 18:49 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் அருகே ராயர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகன் சுரேந்திரன் (வயது 21). தற்போது தோட்டப்பாடி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சொந்த வேலை காரணமாக சுரேந்திரன் சின்னசேலம் சென்றார். அப்போது அங்கு வந்த ராயர்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பழனியாப்பிள்ளை என்பவர் தேர்தல் முன்விரோதம் காரணமாக சுரேந்திரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சுரேந்திரனின் உறவினர்கள் சின்னசேலம் பஸ் நிலையம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பழனியாப்பிள்ளை மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்களை எழுப்பினர். இது குறித்த தகவலின் பேரில் சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று சுரேந்திரனின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்